மோடி அரசாங்கத்தில் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதா?எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறதே! அன்று தமிழகத்திலும் இன்று கர்நாடகாவிலும் ஏன் இப்படி அமளி துமளி பண்ணுகிறார்கள்?

எந்தக் காலத்தில் இரண்டு நிறுவனங்களும் யோக்கியவான்களாக நடந்து கொண்டிருக்கின்றன? ஒரு கட்டத்தில் சி.பி.ஐ. தலைமை அதிகாரி சில பிரச்சனைக்குரிய மனிதர்களை அதிகாரத்தில் இருக்கும் போதே சந்தித்திருக்கிறார். ரஞ்சித் சிங் என்று நினைக்கிறேன். அவர் இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

எல்லா காலத்திலும் இது நடந்திருக்கிறது.

அடுத்து மோடி தொலைநோக்காளர் என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் ஒன்று செல்லாக்காசு.அந்த திட்டம் கொண்டு வந்த நாள் முதல் இன்னும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதில் வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும், பல கோடிக்கணக்கான ரூபாய் எளிதாக சிக்கியபடி உள்ளது.

அதே வருமான வரி துறை தான். அதே சி.பி.ஐ.தான். அதே அமலாக்கப் பிரிவு தான். ஆனால் இப்போது எல்லோருக்கும் ஒருங்கிணைந்த தகவல்கள் எளிதாக கிட்டுகின்றன. ஏதோ ஒரு இடத்தில் சிக்கி விடுகிறார்கள்.

நான் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக தாக்கல் செய்து விட்டு அடுத்து இந்த செல்லாக்காசு சமயத்தில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் கணக்கு எளிதாக என்னால் சொல்ல முடியுமோ? இப்போது அந்த வேலை தான் நடக்கிறது. சுமார் 5 லட்சம் கணக்குகளை அவர்கள் டெபாசிட் செய்த தொகையோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள்..

ஆக அதில் சிக்கிக் கொண்டது தான் பெங்களூரூ சமாச்சாரம். காங்கிரஸ், பெங்களூருக்கு தங்கள் குஜராத் எம்.எல்.ஏக்களை கடத்திச் செல்வது நியாயமென்றால், இதுவும் நியாயம் தான்.

இன்னொரு விஷயம்.. தமிழகத்திலும் ஒரு பெரிய புள்ளி சிக்கக் கூடும். அது தமிழக அரசியலில் திடீர் மாற்றம் கொண்டு வரலாம் என்பது கூடுதல் தகவல்.

சரி. அப்படியானால் பாரதிய ஜனதா ஊழலே செய்யவில்லையா என்று கேட்கலாம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.காங்கிரஸ் ஆட்சியில் அப்படி ஒன்றும் பாரதிய ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள் சிக்கியதாக எனக்கு நினைவில்லை..

Leave a Reply