காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதா, சீனாவின் தொடர்புதொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா பேசுகையில், “ஜனநாயகத்தின் பரவலாக்கத்தை சீனாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். சீனாவின் மீது ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு அன்பு, அவர் இந்தியாவின் செய்தித்தொடர்பாளர் போலின்றி சீனாவின் பிரதிநிதி போன்று ஏன் செயல்படுகிறார்?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 

 

ராகுல்காந்தியின் மானசரோவர் யாத்திரை தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியுள்ள பாத்ரா, “நேபாளம் வழியாக சீனாவிற்கு பணத்தை தொடங்கியுள்ளார். எல்லா விஷயங்களிலும் சீனாவின்பார்வையை பற்றியே பேச ராகுல்காந்தி விரும்புகிறார், சீனாவின் முன் நோக்கு பார்வையை பற்றி பேசுவது கிடையாது, சீனாவில் எந்த அரசியல்வாதியை சந்திக்க செல்கிறார்?” எனவும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே டோக்லாமில் மோதல்போக்கு நீடித்த போது விதிமுறைகளை மீறி சீன தூதரை ராகுல்காந்தி பேசினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் சம்பித் பாத்ரா.

 

“  டெல்லியில் சீன தூதரக அதிகாரிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார், முதலில் அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஏற்றுக்கொண்டார்கள். இந்திய அரசாங்கத்திற்கு கவனத்தில் கொள்ளாமலே இது நடைபெற்றது,” எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply