சீன எல்லையில்உள்ள பாதுகாப்புப்படை வீரர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தசரா பண்டிகையை கொண்டாடடினார். 

நான்குநாள் பயணமாக உத்தரகண்ட் மாநிலத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் ராஜ்நாத்சிங். அவரது பயணத்தின்போது இந்திய-சீன எல்லையான ரிம்கிம்,ஜோஷிமத் மற்றும் சாமோலி மாவட்டத்தின் அவுலி பகுதிகளுக்குச் சென்றார். 

ரிம்கிம் பகுதியில் அமைந்துள்ள இந்தோதிபெத் எல்லை போலீஸார் முகாமுக்குச் சென்ற ராஜ்நாத்சிங், அங்கு வீரர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

அங்கு நடைபெற்ற தசரா வழிபாட்டில் பங்கேற்றவர், வீரர்களுக்கு தசராவாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் எல்லையில்போராடும் வீரர்களின் துணிச்சலை பாராட்டினார். 

 
 

மேலும், வீரர்களுக்குத் தேவையான அனைத்தும் உதவிகளும் விரைவில் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். பனியில் சென்றுவரும் வகையில் பனி ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களும், பனியைதாங்கும் வகையிலான ஆடைகள், தொடர்பு கொள்வதற்கான கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

Leave a Reply