போர் என்று வரும்போது நாம் கவனிக்க வேண்டியவை போர் இப்போது நம்மக்கு தேவை இல்லாத ஓன்று ,, நம் பொருளாதாரம் முன்னேறி கொண்டு இருக்கிறது, போர் வந்தால் பொருளாதாரம் மிக வேகமாக விழும், நம் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடும் ,

சீனாவின் தலைவர்களுக்கு சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ,, ஆனால் அவர்களை நாம் அடக்கு முறை மூலம் ஒடுக்கி விடுகிறோம் .. அடக்கு முறையில் ஒடுங்கி இருக்கிற நம் மக்கள் கிளர்ச்சி செய்ய ஒரு வாய்ப்பு ஏற்படும் ,, அவர்களே நம் ராணுவத்திக்கு எதிரான நிலையை எடுக்க கூடும் ,,

சில பேர் ஜனநாயகம் வேண்டும் என்கிறார்கள் , அந்த கோபத்தில் நாட்டை பிரிக்கணும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் இருக்கிறது ,, ஆனால் வெளியே தெரிய வில்லை , அது பயத்தின் வெளிப்பாடு அது எப்போது போல் இருக்காது , இது உண்மையோ உண்மை ,

அது போக நம்மை சுற்றி உள்ள 20 நாடுகளிடம் நாம் பகை ,, அதனால் அத்தனை நாடுகளையும் சமாளிக்க வேண்டி வரும், அதில் சில நாடுகள் சாதாரணது அல்ல ,, நாம் வல்லரசு நாம் ஜெயித்து விடலாம் என்று கனவு காண வேண்டாம், நீங்கள் வைத்து இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அந்த நாடும் வைத்துள்ளது ,, அதனால் போர் வேண்டாம் என்பதை உறுதியுடன் கூறுவேன்,,

இன்னும் நாம் சொல்ல போகும் முக்கியமான ஓன்று ,,அவர்களின் ஆட்சி பீடத்தில் ஒரு நல்ல ஆட்சியாளர் உக்கார்ந்து உள்ளார் , அவரின் செயல் பாடு உலகநாடுகளையும் , உலக தலைவர் களையும் கவர்ந்து உள்ளது , அது நமக்கு ஆபத்து , அந்த நாடுகள் இந்தியாவை மென்மையாக தொட கூட விடாது என்பது என் எண்ணம் , அதை G 20 மாநாட்டில், , அதற்க்கு முன் அவர் விஜயம் செய்த நாடுகளிடம் கண்டோம் ,,

போரில் என்ன நடக்கும் என்பதை வாயால் சொல்ல முடியாது ,, அவர்களும் அழிந்தே விடலாம் , நாமும் அழிந்து விடலாம் ,,ஆனால் இப்போது உள்ள நம் எதிரிகளை வைத்து பார்த்தால், நாம் அழிந்து விடுவோம் என்பதே என் எண்ணம் ,,

படை பலத்தையும் , பண பலத்தையும் வைத்து போரின் முடிவை எடை போடாதீர் ,, ராஜதந்திரம் முக்கியம் ,, சமாதானம் பேசும் ஒரு நாடு , போரை விரும்பாத ஒரு நாடு போருக்கு விரும்பி அழைக்கிறது என்றால் அதன் தந்திரத்தில் எதோ இருக்கிறது ,,

நம்மால் ஒரு நாள் ஏற்றுமதி பண்ணாமல் இருந்தால் நம் பொருளாதாரம் சரிந்து விடும் , மக்கள் கிளர்ச்சி தானாக ஆரம்பிக்கும் ,, ஆனால் போர் என்ற நிலை வந்தால் கப்பல் போக்கு வரத்து சீரடைந்து ஏற்றுமதி பண்ண 1 வருடமும் ஆகலாம் பல வருடமும் ஆகலாம் , அதற்க்கு நாம் தாக்கு புடிக்க முடியுமா ? மக்கள் கிளர்ச்சியை நாம் தடுக்க முடியுமா ?

உலக நாடுகளை கவராமல் நீங்கள் என்ன வல்லரசு என்று சொன்னாலும் அது பொய்யே, முதலில் நம் நாட்டுக்கு நப்பை உருவாக்குங்கள் இதை எல்லாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Leave a Reply