சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. இந்தநிலநடுக்கத்தால், அங்கு பலத்தசேதம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இதுவரை சுமார் 20 பேர்வரை உயிரிழந்துள்ளனர். நூற்றுக் கணக்கானோர் காயம் அடைந்தனர். மீட்புப்பணிகள் தீவிரவாக நடைபெற்று வருகிறது. ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில், சீன நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தியபிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் பிரதமர் மோடி சீன நில நடுக்கத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply