ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுகிடந்த இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று வெள்ளையனே வெளியேறுபோராட்டம். இந்த போராட்டம் 1942, ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி நடைபெற்றது.

 

இந்தப் போராட்டத்தின் நினைவாக ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம்கொடுத்து விட்டு அவர்கள் தாயகம் திரும்பினர். அன்றிலிருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 76வது நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

 

தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் 89 சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர்  மோடி, சுதந்திர போராட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார்.

 

இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் நாட்டிற்குசெய்த மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply