துணைஜனாதிபதி தேர்தல் வெங்கையா நாயுடு வெற்றிபெற்ற நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியானார்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
 
பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-88 வரை ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளராகவும், 1988-1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
 
கடந்த 1988-ஆம் ஆண்டிலிருந்து 3 முறை கர்நாடகா மாநில எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியின் போது கடந்த 2000-2002-ம் ஆண்டு வரை மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
 
கடந்த 2005-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய துணைத்தலைவராக உள்ளார். கடந்த 2014-2017 வரை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுதுறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.பின்னர் 2016-17-ஆம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.
 
கோபால கிருஷ்ணகாந்தி வெற்றி பெற்றிருந்தால் 13-ஆவது துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றதால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத்தலைவர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ம் ஆண்டு பிறந்தவர்.
 

இந்தியாவில் துணை ஜனாதி பதிகளாக பதவிவகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணைஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல்பிரதமர் என்ற பெருமை நரேந்திரமோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

 

 

 

Leave a Reply