செங்கோட்டையில் ஆகஸ்ட் 15-ம் தேதி தேசியக்கொடியை ஏற்றிவைத்து ஆற்றவுள்ள சிறப்புரையில் என்னென்ன அம்சங்கள் குறித்துபேசலாம் என கருத்து தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலைபெற்ற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி ஆண்டுதோறும் நமதுநாட்டின் சுதந்திரதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் அன்றைய நாளில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டுமக்களிடையே சிறப்புரையாற்றுவது மரபாகவும் வழக்கமாகவும் இருந்துவருகிறது.

இந்த ஆண்டின் சுதந்திரதின விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறை நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திரமோடி, தனது தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக டெல்லி செங்கோட்டையில் வரும் 15-ம் தேதி காலை மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திரதின விழாவின் போது எனது உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பொது மக்கள் தங்களது விலைமதிப்புள்ள கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளலாம். இதற்காக ‘நமோ ஆப்’பில் ஒரு பிரத்யேக தளம் உருவாக்கபட்டுள்ளது. உங்களுடைய எண்ணங்களை டெல்லி செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நம்நாட்டில் வாழும் 130 கோடி மக்களும் கேட்கட்டும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி இன்று பதிவிட்டுள்ளார்

Comments are closed.