பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் வானொலி மூலம் நாட்டுமக்களுக்கு ஆற்றும் உரையின் 43-வது நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசையிலும், இடம் பெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கலந்துகொண்டார். 

கடந்த மாதம் ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்சியில் இந்தியா தொழிற்துறையில் அதீத சக்தி வாய்ந்த நாடாடக் இருக்கவேண்டும் என கனவு கண்டார். அவரது கனவு இன்று நிறைவேறிவருதாக தெரிவித்தார். 

இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க நாளாக நினைவுகூரப்படும். பல இந்தியர்களின் வாழ்வு என்றென்றும் மாறும் என்ற உறுதிப்பாட்டை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.  இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலுமே மின்சாரம் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார் தொடர்ந்து 

ஃபிட் இந்தியா இயக்கத்தை பற்றி பேசிய பிரதமர், இயக்கத்தின் பெரும் ஆதரவுக்கு மகிழ்ச்சியடைந்தார். பிட் இந்தியா இயக்கத்தில் பங்களித்ததற்காக, பிரதமர் மோடி புகழ்பெற்ற நடிகர் அக்ஷய் குமாருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். 

உடல்தகுதி குறித்து எனக்கு ஏராளமான கடிதங்கள் மற்றும் ஆலோசனைகள் வந்துள்ளன. இதுபெருமை அளிக்கிறது. அனைவரும் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல்நலத்துடன் இருக்க யோகா முக்கியமானது. 4வது சர்வதேச யோகாதினத்தை சிறந்த தினமாக மாற்ற வேண்டும்.

சுத்தமான இந்தியாவுக்கு நமது பங்களிப்பை நாம் அளிப்போம். தேர்வுமுடிந்து விடுமுறையில் உள்ள இளைஞர்கள் மத்திய அரசு அளிக்கும் பயிற்சியில் இணையவேண்டும். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

காமன்வெல்த் போட்டியில், இந்தியமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நமது வீரர்கள் விளையாடி யுள்ளனர். தேசிய கொடியுடன் வெற்றிபெற்ற வீரர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன். 

தண்ணீரை சேமிக்க நாம் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அடுத்த தலைமுறை யினருக்காக ஒவ்வொருசொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். தண்ணீரை சேமிப்பது குறித்து நமது முன்னோர்க ளிடமிருந்து பாடம் கற்று கொள்ளவேண்டும். தண்ணீர் சேமிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் படுகிறது. இது தவிர தண்ணீர் சேமிப்பு மற்றும் மேலாண் மைக்காக சராசரியாக 32 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டுள்ளது. இதனால் 150 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் எனதருமை நாட்டுமக்களே, எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் குட்  நியூஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள், நாட்டுமக்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் குட் நியூஸ் இந்தியா நிகழ்ச்சியைப் பாருங்கள், நமதுதேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றிவருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல்லாம் அதில் காணக் கிடைக்கின்றன.
    
சில தினங்கள் முன்பாக, தில்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப்பற்றி ஒரு விஷயத்தை குட் நியூஸ் இந்தியாவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச்சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்த இளைஞர்கள், தில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப் பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.  தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப்புதுமையான செயலைத் தொடங்கினார்கள்.  தில்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு தொடங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது.  இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக்காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  
    
சகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தராகண்டின் மலைப் பகுதியின் சில விவசாயிகள், நாடு முழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக்கிறார்கள்.  அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள்.  உத்தராகண்ட்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப்படுகின்றன.  மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக்காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச் சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதைவிட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள்.  என்ன செய்தார்கள்?  அவர்கள் தங்கள் விளைபொருட்களிலிருந்து பிஸ்கட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனைசெய்வதில் ஈடுபட்டார்கள்.  இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிகபயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது. 

முனார் கிராமத்தில் இவர்கள் ஒருகூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார்கள், அங்கே பிஸ்கட்களைத் தயார்செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள்.  விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை தேசிய ஊரகப் பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கவுசானி வரைகூட கொண்டுசேர்க்கப்பட்டு வருகிறது.  விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 லட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத் திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடை பட்டிருக்கிது என்று கூறினார்.

Leave a Reply