சுமார் 2000 ஆண்டுகள் பழமையான சாமிசிலைகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா திருப்பியளித்துள்ளது.

தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமிசிலைகள் திருடப்பட்டு அமெ ரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப் படுகின்றன. அந்த வகையில் கடத்தலின் போது அமெரிக்க சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 200 கலைப்பொருட்களை அந்நாடு நேற்று முன்தினம் திருப்பி அளித்தது.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியுடம் அவை ஒப்படைக்கப் பட்டன. இதில் சென்னை சிவன்கோயிலில் இருந்து திருடப்பட்ட துறவி மாணிக்கவாசகரின் சிலையும் அடங்கும். சோழர் காலத்தைச்சேர்ந்த இந்த சிலை 2000 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

இதேபோல ஆயிரம் ஆண்டுகள் பழமையான வெண்கல விநாயகர்சிலை உட்பட 200 கலைப்பொருட்கள் இந்தியாவிடம் திருப்பி அளிக்கப் பட்டுள்ளன. அவற்றின் ஒட்டு மொத்த மதிப்பு ரூ.670 கோடி என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடந்த சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அங்கு அவர் இந்தியில் பேசியதாவது: இந்தியாவுக்கு சொந்தமான பொருட்களை அமெரிக்கா திருப்பிஅளித்துள்ளது. அதற்காக அதிபர் ஒபாமாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது திருப்பி அளிக்கப்பட்ட கலைப் பொருட்கள் வெறும்சிலைகள் அல்ல. அவை இந்திய பாரம்பரியத்தோடு இணைந்தவை. இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை யானவை. அதனால் தான் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர் இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply