உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தமாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத்துறை சார்பில் பல்துறை வளர்ச்சி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி கண்டு ரசித்தார்.

இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, நமது நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளன. இதனால் சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டில் வரிகட்டமைப்பை மேம்படுத்தி, தொழில்செய்வதை எளிமையாக்கி உள்ளோம். வங்கி அமைப்புகள் வலிமைபடுத்த பட்டுள்ளது என்று கூறினார். இந்தமாநாடு மூலம் ரூ.70,000 கோடி முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply