கரோனாவை எதிர் கொள்ள பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகளான சுவாசரி, கரோனில் தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை என பதஞ்சலி நிறுவனர் பாபாராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தவர் தெரிவித்ததாவது:

“கரோனாவை எதிர்கொள்ள பதஞ்சலி சரியானபணியை செய்திருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி சரியான பாதையைநோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைப்பில் இருக்கும் மாநில பிரிவிடம் இதற்கு உரிமம் பெற்றுள்ளோம். கரோனா சிகிச்சை என்ற வார்த்தையை ஆயுஷ் அமைச்சகம் உபயோகப் படுத்தவில்லை.

ஆயுஷ் அமைச்சகத்துடன் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. தற்போது கரோனில், சுவாசரி உள்ளிட்டவற்றுக்கு தடையில்லை. சுவாசரி கரோனில் தொகுப்பு மருந்துகள் இன்று முதல் நாடுமுழுவதும் எவ்வித சட்ட ரீதியிலான இடையூறுகளின்றி கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்துக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”

Comments are closed.