காய்ச்சல் நெஞ்சுவலி காரணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

நுரையீரல் மருத்துவம் துறையின் பழமையான தனியார்வார்டு ஒன்றில் சேர்க்கப்பட்ட அவர் பின்னர் அங்கிருந்து கார்டியோ நியூரோ மையத்திற்கு மாற்றப்பட்டார்.

64 வயதான சுஷ்மாவுக்கு ஏற்கனவே கடுமையான நீரழிவு நோய்(சர்க்கரை) இருக்கிறது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அவருக்கு நீரழிவுநோய் பிரச்சனை இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் சுஷ்மா சுவராஜை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துள்ளார். நேற்று இரவு 9 மணிக்கு பிரதமர் மருத்துவமனைக்குள் நுழைந்ததாகவும், பின்னர் 9.25 மணிக்கெல்லாம் அங்கிருந்து புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுஷ்மாசுவராஜ் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்.

Leave a Reply