சென்னையில் இன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திரமோடி கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப் படவுள்ள நிலையில் தோ்தலுக்கான ஆய்த்தப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டி வருகின்றன. இந்நிலையில் சென்னையை அடுத்த வண்டலூா் பகுதியில் இன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொள்கிறாா்.

இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சித் தலைவா்களும் இந்தகூட்டத்தில் கலந்து கொள்கின்றனா்.

Leave a Reply