சென்னை-கன்னியா குமரி இடையில் கடல் வழியாக இருப்பு பாதை அமைக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களை  தொடங்கி வைத்தார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு எண்ணூர்-திருவொற்றியூர் இடையே 7 கிலோமீட்டர் தொலைவில் 4-வது ரயில்பாதை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கி எந்திரம். சென்னை கோட்டத்துக்குட்பட்ட 17 ரெயில் நிலையங்களில் பொருத்தப் பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகள். மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 கிலோவாட் திறன்கொண்ட சூரிய மின்சக்தி மையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதேபோல் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 இடங்களில் குடிநீர்வினியோகம் செய்யும் எந்திரம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் வை-பை வசதி உள்ளிட்ட திட்டங்களை அவர் துவக்கிவைத்தார். விழாவில் பேசிய, சென்னை – கன்னியா குமரி இடையில் கடல்வழியாக இருப்புப்பாதை அமைக்கப்படும் என்று அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்தார். மேலும், கிழக்குகடற்கரை சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து புதியதிட்டத்தை அமைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply