சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ். அலுவலகத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டுமிரட்டல் விடப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ். சார்பில் நடத்தப்படும் வாரப் பத்திரிகை அலுவலகத்திற்கு, நேற்று தபாலில் மிரட்டல்கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது, ஐ.எஸ். அமைப்புமூலம் தாக்குதல் நடத்துவோம், என்ற வாசகங்கள் இருந்தன. தமிழில் எழுதப் பட்டிருந்த அந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தகடிதம் குறித்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் உள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply