சென்னை – சேலம் பசுமை வழித் தடம் அமைக்கப்படும் என மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை -சேலம் இடையே ரூ. 10 ஆயிரம்கோடி செலவில் பசுமை வழித்தடம் அமைய உள்ளது. இந்தவழித்தடம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதன் மூலம் பயணநேரம் 2 மணி நேரம் குறையும். பசுமை வழித்தடம் அமைய முதல்வர் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் 2 எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என கூறினார்.

Leave a Reply