சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல் கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

முதலமைச்சர் ஜெயலலிதாவை, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கரையோரம் வசித்த பாதிக்கப்பட்டமக்களின் நிலையை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்துரைத்தார்.

 

சென்னை நகரில், குடிசை களை இழந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடுகள்செய்ய, 750 கோடி ரூபாயும்,  அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாற்று குடியிருப்புகள்கட்ட 5 ஆயிரம் கோடி ரூபாயும்  ஒதுக்கவேண்டும் என வெங்கய்யா நாயுடுவிடம் அவர் கோரினார்.

 

சென்னை நகரின் மறு சீரமைப்புக்கு முதல்கட்டமாக 4,500 கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply