சொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் ஹர்தீப்சிங் புரி கடந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், "சொத்து பரிவர்த்தனை களுடன் ஆதாரை இணைப்பது சிறந்தயோசனை ' என்று கூறியிருந்தார். இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், தற்போதைக்கு, சொத்து பரிவர்த்தனைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கும்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.


பினாமி சொத்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால், சொத்து பரிவர்த் தனைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் படலாம் என்ற யூகங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப்பாதுகாப்பு திட்டம்: இதனிடையே, மக்களவையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் சி.ஆர்.சௌதரி செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக் கூறியதாவது:


உணவு மானியத்திட்டத்துடன் ஆதாரை அடிப்படையாக கொண்ட பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளை இணைப்பதன் நோக்கம் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளை சரியாக அடையாளம் காண்பது தான். அதன் படி, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கடந்த 2013-2017 கால கட்டத்தில் 2.75 கோடி போலிரேஷன் கார்டுகளை ஒழித்துள்ளன. ஆதார் அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலமே இதுசாத்தியமானது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார். உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருநபருக்கு மாதந்தோறும் ரூ.1 முதல் ரூ.3 வரையிலான விலையில் 5 கிலோ உணவுதானியங்களை அரசு வழங்கி வருகிறது. இச்சட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கும் மேல் கொண்டுவரப் பட்டுள்ளனர். இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.1.40 கோடி செலவாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply