கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரட்டைவேடம் போடுகின்றன, இந்திராகாந்தி பிரதமாராக இருந்தபோது, கச்சத் தீவை இலங்கைக்கு காங்கிரஸ் கட்சி தாரைவார்த்தது. அப்போது, கூட்டணியில் இருந்த திமுக எவ்வித எதிர்ப் பையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்த திமுக பதவிகளுக்காக மட்டுமே பிரச்னைசெய்தது. ஆனால்,  கச்சத் தீவுக்காக எவ்விதப் பிரச்னையையும் செய்யவில்லை.இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுமே இரட்டை வேடம் போடுகின்றன.

இந்தியா உலகுக்கு வழங்கியுள்ள மிகமுக்கியமான கொடைகளில் யோகாவும் ஒன்று. பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தலின் பேரில், ஜூன் மாதம் 21-ம் தேதியை உலகயோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது. இந்நாளில், நாட்டுமக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். தமிழக உள்ளாட்சித்தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட வில்லை என்றார்.

தொடர்ந்து, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.

Leave a Reply