கேரளாவில்,பா.ஜ.க,மற்றும், ஆர்எஸ்எஸ்., தொண்டர்கள் மீதான வன்முறைகளை கண்டித்து நடத்தப்பட்ட பேரணியில், உத்தரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.

'கேரளாவில், பா.ஜ.க, மற்றும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, 15 நாட்களுக்கு பேரணி நடத்தப்படும். இதில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பங்கேற்பர்' என, கட்சியின் தேசியத்தலைவர், அமித் ஷா அறிவித்தார். இந்நிலையில், கன்னுார் மாவட்டம் கீசேரியில் நடந்த யாத்திரையில், உ. பி., முதல்வரும்,

பா.ஜ., மூத்த தலைவருமான,யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்;
 

அப்போது அவர் கூறியதாவது:


ஜனநாயகத்தில், அரசியல் வன் முறைகளுக்கு இடம்இல்லை. ஆனால், கேரளாவில் அரசியல் வன்முறைகள் அதிகளவில் நடக்கின்றன. அதை தடுத்துநிறுத்தாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு வேடிக்கைபார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Leave a Reply