மகாராஷ்டிர அரசியலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்பிக்களை கண்டித்துள்ள பாஜக, பாராளுமன்றமாண்பை காப்பாற்றவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போதுஅவர், காங்கிரஸ் கட்சியையும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சாடினார்.

அப்போது பேசிய அவர்,”பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மகாராஷ்டிர அரசியலை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அதனால், அவைநடவடிக்கைகள் முடங்கின. கட்டுக்கடங்காத நடத்தையை காங்கிரஸ் எம்பிக்கள் கைவிட்டு விட்டு, பாராளுமன்றத்திற்கு வரவேண்டும். அவையின் மாண்பையும், சிறந்த பாரம்பரியத்தையும் அவர்கள் காப்பாற்றவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும்,”மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டதாக காங்கிரஸ்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், அங்கு ஜனநாயகத்தை கொலை செய்யப்பட நாங்கள்அல்ல, காங்கிரஸ்தான் காரணம் ” என்று சாடினார்.

மேலும்,”மகாராஷ்டிர மாநிலமக்கள், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கே பெரும்பான்மை தந்தனர். ஆனால், காங்கிரஸ் அந்த பெரும் பான்மையை திருடிவிட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சிவசேனாவுடன் கைகோர்த்துவிட்டது” என்று ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

Comments are closed.