அய்யப்ப பக்தர்களுக்கும் மற்ற கடவுள் நம்பிக்கையுடையோருக்கும் மிகுந்த நிராசையும் இதய வலியையும் ஏற்படுத்திய ஒரு செய்தி   எலக்ட்ரானிக் ஊடகங்கள் சுமந்து வந்து நமக்கு தெரிவித்தனர். உலகம் முழுவதும் பரவியுள்ள கோடிக் கணக்கான அய்யப்ப பக்தர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் உயிரினும் மேலாக கருதி நம்பிக்கையுடன் போற்றி வணங்கி வருகின்ற அவர்களுடைய அய்யனய்யப்பனுடைய சந்நிதானத்தை, ஆசாரத்தை மீறி இரண்டு பெமேனிஸ்டுகள் களங்கப்படுத்தி விட்டார்கள்.

இந்த செய்தி கேட்ட அனைத்து அய்யப்ப பக்தர்களும் கொதித்திருக்கின்றார்கள். 70 காவல்துறையினர் புடைசூழ, மாநில அரசின், குறிப்பாக முதலமைச்சரின் பூர்ண அனுமதியுடன் நடந்தேறிய இந்த அநியாய நிகழ்வு பெரும் கண்டனத்திற்குரியது. ஹிந்துக்களின் கலாச்சாரம்,பண்பாடு,ஆச்சார அனுஷ்டானங்கள், நம்பிக்கைகள் என அனைத்தையும் அழித்து விட வேண்டுமென்று, மிக தீவிரமாக செயல்பாட்டுக்கு கொண்டிருக்கின்ற கம்யூனிஸ்ட் அரசாங்கத்திலிருந்து இப்படி ஒரு வஞ்சனை ஏற்பட்ட வாய்ப்பிருக்கிறது என நன்கு புரிந்துகொண்ட அய்யப்ப பக்தர்கள் நடை திறந்தது முதல், கண்ணில் என்னை ஊற்றி அங்கு மிகுந்த கவனத்துடன் காவல் காத்து வந்தார்கள் .

அந்த பெரும் பாதுகாப்பினை மீறி சந்நிதானத்திற்கு மாவோயிஸ்டுகளான இளம் பெண்களை அழைத்து செல்வது இயலாத காரியம் என்றுணர்ந்த முதலமைச்சரும் அவருடைய துதிபாடகர்களான அதிகாரிகளும் காவல்துறையும்,  வீட்டில் திருடன் புகுந்து செல்வதை போன்று யாருடைய கண்களிலும் படாமல், ஆண்களை போன்று உடை அணியவைத்து,முகம் மறைத்து அந்த இரண்டு யுவதிகளை பின்வழியாக சந்நிதானத்திற்கு அழைத்து வந்தார்கள். அந்த பெண்களுக்கும், கம்யூனிஸ்டு முதல்வருக்கும் ஒரே ஒரு தேவை மட்டுமே இருந்தது. அதாவது பெரும் தடையை மீறி நாங்கள் ஆசாரத்தை மீறி புரட்சி செய்துவிட்டோம் என பறைசாற்ற வேண்டும்.

ஆகவே வந்த பெண்கள் தரிசனம் கூட செய்யாமல் ( அவர்கள் பக்தைகள் அல்ல. வெறும் ஆகிடிவிஸ்டுகள்) கொடிமரத்திற்கருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, விரைவாக கீழே இறங்கி, மரக்கூட்டத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பம்பைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். டி.எஸ்.பி க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் என எழுபது காவல்துறையினர் இந்த பெண்களுக்கு பாதுகாப்பிற்க்காக சென்றதை கேள்விப்பட்ட செய்தியறிந்த பக்தர்களும் பொதுமக்களும் கேரளா காவல்துறையின் அவலநிலையை நினைத்து வேதனைப்படுகின்றார்கள். கேரளா போலிஸிர்க்கிருந்த மதிப்பும் மரியாதையும் சரிந்து விட்டதுடன், நம்பகத்தன்மைக்கும் குந்தகம் விளைந்துள்ளது.

கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அரசாங்கம் முன்னின்று ஒரு பெண்கள் சுவர் நிகழ்வை நடத்தினார்கள்.ஐம்பது கோடிகளுக்கு மேல் செலவு செய்து, அனைத்து அரசாங்க அதிகாரங்களையும் பயன்படுத்தி ஏற்பாடு செய்த அந்த சுவர், பல இடங்களிலும் ஆள் இல்லாமல் இடிந்து வீழ்ந்ததை போன்று காட்சியளித்தது. இந்த தோல்வியிலிருந்து செய்தி ஊடகங்களின் கவனத்தை திருப்பி விடலாம் என்றெண்ணி,  ஒரு வேளை அரசாங்கம் பக்தர்களை முதுகில் குத்தும் இந்த செயலுக்கு துணிந்திருக்கலாம். வரக்கூடிய ஜனவரி 22 ந் தேதி சபரிமலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு அரசாங்கம் இப்படி ஒரு முடிவு எடுத்ததை ஹிந்துக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

எது எப்படியானாலும்,2019 ஜனவரி 2 என்ற நாள், கேரளா வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக அமைந்து விட்டது. அய்யப்ப பக்தர்களின் இதயத்தில் கடும் காயத்தை ஏற்படுத்திய இந்த தினத்தை ஒரு ஐயப்பன் கூட மறக்கமாட்டார். இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகளுக்கு அரசாங்கம் பெரிய விலை கொடுக்க நேரலாம். 1957 ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற முதலாவது தேர்தலில், ஐயப்பன் பெயரை சொல்லி ஒட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்டுகளை ஒழிக்கும் நேரம் வந்து விட்டது என ஐயப்பன் முடிவு செய்திருக்கலாம். கேரளவினுடைய கடைசி கம்யூனிஸ்ட் முதலமைச்சர் என்று வரலாற்றில் பினராயி விஜயனின் பேர் இடம்பிடிக்கும்.

” நம்பிக்கையுடைய ” ஹிந்துக்களுக்கு மட்டும் தரிசன உரிமை வழங்கிய உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இங்கே மீறப்பட்டுள்ளது. நாங்கள் “நம்பிக்கையற்றவர்கள்” என உரத்த குரலில் அறிவித்த ஆகிடிவிஸ்டுகளான இளம் பெண்களை இருமுடிக்கட்டு கூட இல்லாமல் சபரிமலைக்கு அழைத்துவந்த கேரளா அரசாங்கம் பெரும் பாதகத்தை செய்துள்ளது. ஹே.., முதலமைச்சர் பினராயி விஜயா .., ஒவ்வொரு தவறுக்கும் எண்ணி எண்ணி நீங்கள் பதில் கூறும் காலம் நெருங்கி விட்டது…ஐயப்பன் அதை நிகழ்த்துவார். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் படித்து வளர்ந்த எங்களுக்கு, இறைவன் மீதும், இறைவனின் படைப்பான எண்கள் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்..!!

ராமாயணம் யுத்தகாண்டத்தில் இந்திரஜித் வெற்றி பெற்ற சந்தர்ப்பம் உள்ளது ..! நாகாஸ்திரத்தை பயன்படுத்தி ராமலக்ஷ்மணர்களை வீழ்த்தி விட்டார் இராவண புத்திரரான இந்திரஜித் மேகநாதன். வில்லாளி வீரரான இராமபிரானும் தம்பி இலட்சுமணனும் கீழே மூர்ச்சையாகி படுத்திருக்கின்ற காட்சியை நினைத்து பாருங்கள் .. ” உங்களுடைய கண்கண்ட தெய்வமான இராமனை, இதோ நான் வீழ்த்திவிட்டேன் ” என ராம கார்யத்திற்க்காக போராடிய வானர வீரர்களை நோக்கி இந்திரஜித் இறுமாப்புடன் கூறியிருக்கலாம். கால் நடையாக தாண்டி வந்த யோஜனைகள்….சுக்கிரீவ உடன்படிக்கை …சீதையை தேடல்…சமுத்திரத்தை கடந்த ஹனுமானின் முயற்சி … இரவு பகல் பாராமல் மிகவும் சிரமத்துடன் மகா சாகரத்திற்கு குறுக்கே உருவாக்கி விட்ட ராமசேது ….அத்தனையும் வீணாகி விட்டதா …..? ராமருக்காக, அவரை நம்பி வந்த இந்த வானரப்படையை  கூட்டத்துடன் இவன் கொன்று விடுவானா..?  மனதில் சந்தேகம் எழும்.

தயவு செய்து இராமாயணத்தை படிப்பது அத்துடன் நிறுத்தி விடாதீர்கள் ..மேலே படியுங்கள் …ஒளஷதத்துடன் வருகை புரிந்த அனுமனை காணலாம் ..ஒளஷதம் அருந்தி மயக்கத்திலிருந்து விடுபட்ட இராம லட்சுமணனை காணலாம் ..வீரமுழக்கமிட்ட இந்திரஜித்தின் மரணம் காணலாம் ….ஸ்ரீராமருக்காக தேவர்கள் இரதத்துடன் வந்ததையும், இந்திரஜித்தினுடைய தந்தையான இலங்கேஸ்வரரான  சாட்சாத்  இராவணனை கொன்று ஈமக்கிரியை செய்வதையும் காணலாம் ..!!  இறுதியாக வெற்றிவாகை சூடி, சீதையுடன் அயோத்திக்கு திரும்புகின்ற ஸ்ரீராமனையும் காணலாம் ..!

ஜனநாயகமுறையில் அதிகாரத்திற்கு வந்த அரசும் அதனை வழி நடத்துகின்ற முதலமைச்சரும் பெரும்பான்மையான ஜனங்களுடைய நம்பிக்கைகளுக்கும்,வழிபாட்டு உரிமைகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காமல், பிடிவாதபுத்தியுடன் இளம் பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்றது மன்னிக்க முடியாத குற்றமாக ஹிந்துக்கள் கருதுகின்றோம்.இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

சபரிமலை சேவா சமாஜம் உட்பட நூற்றுக்கணக்கான ஹிந்து இயக்கங்களின் கூட்டமைப்பான “சபரிமலை கர்ம சமிதி”(தமிழகத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைத்துள்ளோம்) அய்யப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து வீதியில் இறங்கி போராட துணிந்து விட்டோம். இரும்பு கரங்களால் அய்யன் ஸ்ரீதர்ம சாஸ்தாவினுடைய பக்தர்களை அடக்கிவைக்கலாம் என்ற கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடைய நம்பிக்கை இங்கு விலை போகாது. நாளை, ஜனவரி3 ந் தேதி கேரளாவில் மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். எல்லா அய்யப்ப பக்தர்களும் அவர்களுடைய குடும்பமும் சுற்றமும் முன் நின்று, இந்த முழு அடைப்பை வெற்றிபெற செய்ய வேண்டுமென அய்யப்பனுடைய நாமத்தில் உங்களை வேண்டுகின்றோம் ..

 

ஸ்வாமியே சரணமய்யப்பா ..!!

அய்யப்பனுடைய தொண்டு பணியில்,

ஈரோடு என் ராஜன்,

தேசீய பொது செயலாளர்.

சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம்.

Leave a Reply