துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்ய சபா நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் பின்பற்றுவேன் என்றார்.

மேலும் வெங்கையா கூறுகையில் விவசாய குடும்பத்தில் பிறந்து துணை ஜனாதிப தியானது எனக்கு மரியாதை.விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் துணைஜனாதிபதியானது ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது.கூட்டணியில் இல்லாத அதிமுக. தெலுங்கானா, ராஷ்டீரியசமிதி கட்சிகளுக்கு நன்றி .தனக்கு ஆதரவாக வாக்களித்த பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு நன்றி.மேலும் அதிமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம் பழனிசாமி ஆகியோருக்கும் நன்றி என கூறினார்.

Leave a Reply