ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமராகப் பதவிவகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல்பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இரண்டுமுறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்றுவந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலையைக் காரணம்காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோஅபே அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக்கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1-ம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்தஅமைச்சராக இருக்கும் யோஷிஹைட் சுகா சுமார் 377 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்தநிலையில் யோஷிஹைட் சுகாவைப் பிரதமராகத் தேர்வுசெய்து அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் சுகா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “ஜப்பானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். நமதுசிறப்பான உத்திபூர்வ மற்றும் உலகளாவிய கூட்டிணைவை, நாம் இருவரும் சேர்ந்து புதியஉயரங்களுக்கு கொண்டுசெல்லும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.