ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: ஜம்மு – காஷ்மீரில், பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அங்கு முழு அமைதி திரும்பவேண்டும் என்பது தான், அரசின் விருப்பம். இதற்கான பணிகளில் தான், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எந்தவித தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்புபடைகள் தயார்படுத்த பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply