ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் 35-ஏ சட்டப் பிரிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரியநேரத்தில் முடிவு எடுப்பார். இதில் எங்கள்  நிலைப்பாடு மிகவும் தெளிவு. அதேநேரத்தில், அந்த விவகாரம் தொடர்பாக கட்சியால் எந்தமுடிவும் எடுக்க இயலாது. அதுகுறித்து பிரதமரும், அவர் தலைமையிலான மத்திய அரசும்தான் முடிவுசெய்யும்.

ஆனால் 35ஏ சட்டப்பிரிவு விவகாரத்தில் என்னால் உறுதியளிக்க முடியும். அது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும், மாநில அரசின் நலனை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படும்.
ஜம்மு-காஷ்மீரைச்சேர்ந்த அரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வதற்கு, அந்தமாநிலத்தில் நிகழும் சம்பவங்களுடன் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளை தொடர்புப் படுத்தி பீதியை கிளப்பி விடுகின்றன. தங்களது அரசியல் நலன்களுக்காக இதை அக்கட்சிகள் செய்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீருக்கு பாதுகாப்புப்படைகளை அனுப்புவதும், அங்கிருக்கும் பாதுகாப்புப் படையினரை வெளியேற்றுவதும் இயல்பான ஒன்றுதான்.

சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களின்வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்றத்தில் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. ஹிந்துசட்டத்தில் சிறார் திருமணத்துக்கு தடை விதித்தது போல, முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முத்தலாக் தடைமசோதாவும் முக்கியமான நடவடிக்கையாகும்.

முத்தலாக் தடை மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் சிலர் நேரடியாக ஆதரவு அளித்தனர். சிலர் வாக்கெடுப்பை புறக்கணிப்புசெய்து, மறைமுகமாக ஆதரவுதந்தனர். இந்த ஆதரவுக்காக அவர்களுக்கு பாஜகவின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி

Comments are closed.