ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக தேர்தல் பொறுப்பாளராக அவினாஷ் ராய் கன்னாவை, கட்சித் தலைமை நியமித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகதேர்தல் பொறுப்பாளராக கட்சியின் துணைத் தலைவர் அவினாஷ் ராய் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பாஜகவின் அமைப்பு ரீதியான விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் அவர் செயல்படுவார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக, வாக்குச்சாவடி அளவில் தொண்டர்கள் தயார்படுத்தப் படுவார்கள் என்று அருண் சிங் தெரிவித்தார்.

 

Comments are closed.