ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசமைப்புச்சட்டத்தின் 35 ஏ} பிரிவை வைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி முயன்றுவருவதாக, பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜம்மு}காஷ்மீரில் ஆளும்மக்கள் ஜனநாயகக் கட்சி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் அனில் குப்தா, இது தொடர்பாக, சனிக்கிழமை கூறியதாவது:


ஜம்மு}காஷ்மீரில், பிறமாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்குவதற்கும், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவு தடைவிதிக்கிறது.


இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்யுமானால், ஜம்மு பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு பிராந்திய செய்தித்தொடர்பாளர் தேவேந்திர ரானா கூறுகிறார்.


இதன் மூலம், மற்றவர்களை விலக்கி வைக்கவேண்டும் என்ற அவரது கட்சியின் மனநிலை தெரியவருகிறது. இது, ஜம்மு பகுதிமக்களின் ஒருங்கிணைந்த கலாசாரம், மதச் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதலாகும்.


அரசமைப்புச் சட்டத்தின் 35}ஏ பிரிவைவைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே பெரும்பான்மைவாதத்தை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதிமக்களிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கவும் தேவேந்திர ரானா முயலுகிறார்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 35}ஏ, சட்டப்படி சரியானதென்றால், தேசியமாநாட்டுக் கட்சியினர், உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அதற்குமாறாக, காஷ்மீர் மக்களை தூண்டி விடுவது ஏன்? போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்று அனில் குப்தா கேள்வி எழுப்பினார்.

Leave a Reply