மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம், 2024-ம் ஆண்டுவாக்கில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், அங்கன்வாடி மையங்களுக்கும், உண்டு உறைவிடபள்ளிகளுக்கும் உறுதியளிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 100 நாள் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி, தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள 1.26 கோடி ஊரகப்பகுதி வீடுகளில், 29.36 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன. இவ்வாண்டு, 34 லட்சம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய்இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சன்சத் ஆதர்ஷ்கிராம யோஜனா திட்டத்தின் கீழ், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த 117 கிராமங்களில் 100% இணைப்பும், எஸ்சி, எஸ்டி அதிகம் வசிக்கும் கிராமங்களில் 90% இணைப்பும் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பல பகுதிகள், முற்றிலும் நிலத்தடிநீரையே நம்பியுள்ளன. பல கிராமங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதியே இல்லை. இக்கிராம மக்களுக்கு ஜல்ஜீவன் இயக்கம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். பாதுகாப்பான குடிநீர், தண்ணீரால் உருவாகும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதுடன், மக்களின் சுகாதாரத்தை பாதுகாத்து, அதன்மூலம் ஆரோக்கிய இந்தியா என்னும் லட்சியத்தை எட்ட உதவும்.

Comments are closed.