ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழக பெயரை, மோடி பல்கலைக் கழகம் என்று மாற்றப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 1969ம் ஆண்டு டெல்லியில் ஜவர்ஹலால்நேரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நேருவின் பெயரால், தொடங்கப்பட்ட இந்த பல்கலைக் கழகம், இன்று வரையிலும், நாட்டின் முதன்மை பல்கலைக்கழகமாக திகழ்கிறது.

இந்த நிலையில், ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை (JNU) மோடி நேஷனல் பல்கலைக்கழகம் (MNU) என மாற்றப்படவேண்டும் என்று டெல்லி பாஜக எம்.பி ஹன்ஸ ராஜ் ஹன்ஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்ஹன்ஸ் ராஜ் பங்கேற்றார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசியவர், காஷ்மீர் விவகாரத்தில் இதற்கு முன்பு காந்தி, நேரு எவ்வாறு கையாண்டனர் என்பதைபற்றி விளக்கமளித்தார். அப்போது அவர் ‘காஷ்மீரில் தற்போது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. நமது எல்லோருடைய வேண்டுதலும், அங்கு அமைதி நிலைத்திருக்கவேண்டும் என்பதுதான். இதற்கு முன்பு நம்முடைய முன்னோர்கள் செய்து தவறுக்கு தான், இப்போது விலைகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நான் இப்போது தான் இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி பெயரில் ஏதாவது அமைக்கப்படவேண்டும். அந்த வகையில், ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை மோடி நரேந்திர பல்கலைக்கழகம் என்று மாற்றும்படி பரிந்துரைசெய்கிறேன்’ இவ்வாறு பாஜக எம்.பி ஹன்ஸ் கூறியுள்ளார்.

Comments are closed.