ஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் கூடாது; ஜாதிப் பாகுபாடுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏற்கவில்லை என்று அந்த அமைப்பின் பிரசார பிரமுக் (தலைமை செய்தித் தொடர்பாளர்) அருண் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:


அனைவரும் ஒரேகோயிலில் வழிபட வேண்டும். ஒரே கிணற்றில் நீரைப் பயன்படுத்த வேண்டும். இறப்புக்கு பின்புகூட அனைத்து ஜாதியினருக்கும் ஒரேஇடுகாடு, சுடுகாடு இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இப்போது மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்தே இது தான் இந்த அமைப்பின் கொள்கை.


சமுதாயத்தில் அனைத்துத்தரப்பு மக்களிடமும் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும் போதுதான் ஒற்றுமையுடன் வாழமுடியும். இதற்கு ஜாதி தடையாக இருக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply