காலம் காலமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியால செய்ய முடியாத சீர்திருத்தங் களை சில வருடங்களே ஆட்சியில் இருந்த பிஜேபி தான் செய்து முடித்துள் ளது என்பதை ஜிஎஸ்டியும் இந்திய சரித்திரத்தில் இன்று எழுதியுள்ளது.

இன்று அறிமுக மாகியுள்ள ஜிஎஸ்டி வரி உலகில் முதன்முதலில் பிரான்சு நாட்டில் தான் 1954ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இப்பொழுது 159 நாடுகளில் பின்பற்றப்படுகி றது.

இந்தியாவில் 2000ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் அவர்களால தான் ஜிஎஸ்டி பற்றிய முதல் விவாதம் துவக்கி வைக்கப் பட்டது. இந்திய பாராளுமன்றத்தில் ஒலித்த ஜிஎஸ்டி என்கிற வார்த்தையே முதன்முதலில் வாஜ்பாய் வாயில் இருந்து தான் வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

சுதந்திர இந்தியாவின் முதல் எழுச்சி மிகு பிரதமரான வாஜ்பாய், 2001ம் ஆண்டில். ஜிஎஸ்டி வரிவிதிப்புககான மாதிரியை உருவாக்க மேற்குவங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்றினை அமைத்தார்.

அதை தொடர்ந்து 2003 ம்ஆண்டில் அப்போதை ய நிதி அமைச்சக ஆலோசகர் விஜய் கேல்கர் தலைமையில் ஜிஎஸ்டி சம்பந்தமான பரிந்து ரைகளை அளிக்க ஒரு்குழுவை அமைத்தார் வாஜ்பாய்.

விஜய் கேல்கரும் 2004ம் ஆண்டில் நாடு முழுவதும் இப்பொழுது இருக்கும் வரி விதிப்பு முறைக்குப் பதிலாக நாடு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமலாக்கலாம் என்று வாஜ்பாய் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

ஜிஎஸ்டிக்காக எல்லாம் ஓகே என்றநிலையில் 2004 ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து் பத்து ஆண்டுகள் ஜிஎஸ்டி யை வெறும் விவாதம் அளவிலேயே எடுத்து சென்று கொண்டு இருந்தது.

2014 ல் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர மோடி ஜிஎஸ்டியை உடனே அமல் படுத்த துடித்தார் ,2014:ம் ஆண்டில். டிசம்பர் மாதம் 19 ம் தேதி அன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 122ஆவது திருத்தம் ஜிஎஸ்டிக்காக அருண் ஜெட்லியால் நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.

2015 ம்ஆண்டு மே மாதம் 6ம்தேதி ஜிஎஸ்டி மசோதா லோக்சபாவில் நிறைவேற்றியது. மோடி அரசு.ஆனால் ராஜ்ய சபாவில் பிஜேபி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஒரு வருடம் இழுத்துக்கொண்டே வந்த ஜிஎஸ்டி மசோதா 2016 ம் ஆண்டில் ஆகஸ்டு 3 ம் தேதி மோடியின் பெரு முயற்சியினால் ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

இதையடுத்து செப்டம்பர் 2 ம் தேதி 2016 ம் ஆண்டில் ஜிஎஸ்டி மசோதா நாடு முழுவதும் பிஜேபி கூட்டணி ஆட்சியில் உள்ள 16 மாநில சட்டசபை களில் நிறைவேறியது. இதையடுத்து ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஜனாதிபதிபிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ம் தேதி அன்று ஜூலை 1 ம் தேதி முதல் எந்தவித தடையும் இன்றி ஜிஎஸ்டி அமலாகும் என்று மோடி அறிவித்தார்.இன்று ஜிஎஸ்டி அமலாகி விட்டது.

பாருங்கள் ஒரு நாட்டின் முக்கிய வருவாயே வரிகள்தான் அதை சீரமைத்து ஒழுங்கு படுத்த
16 ஆண்டுகள் ஆகியுள்ளதை நினைக்கும் பொழுது இந்திய குடிமகன் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்..

எதுவாக இருந்தாலும். இந்தியாவை வல்லமையாக்க வாஜ்பாய் தொடங்கிய முயற்சியை மோடி
முடித்து வைத்துள்ளார் என்பதை நினைத்து ஒவ்வொரு பிஜேபிக்காரனும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்…

நன்றி விஜெயகுமார் அருணகிரி

Leave a Reply