ஜிஎஸ்டி அமலாக் கத்தினால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை  ஈடுகட்ட ரூ.8,698 கோடியை மத்திய அரசு அளித் துள்ளது.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவைவரி விதிப்புமுறை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்பல்வேறு பொருட்களுக்கான வரிவிகிதம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது. அவ்வப்போது கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் சிலபொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி அமலாக்கத்தால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாநில அரசுகள் சந்தித்த வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்தியஅரசு ரூ.8,698 கோடி இழப்பீடு அளித்துள்ளது என்று பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார் .

மொத்த வரிவருவாய் தொகையான 15,060 கோடி ரூபாயில் 58 சதவீதம்தொகை மாநிலங்களுக்கு அளிக்கப் பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply