அருணகிரி; ஜிஎஸ்டி பற்றிச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்லுஙகள். தொழில் அதிபர்..முறையாகத் தொழில் செய்வோருக்கு மிகவும் பயன் தரும். பொருள்களை வாங்கியதையும் விற்றதையும் *கணக்கில் காட்டுவோருக்கு ஜிஎஸ்டி முழுப் பாதுகாப்பு.* கார்ப்பரேட் நிறுவனங்கள் தப்பிக்க முடியாது. சிறு குறு வணிகர்களுக்கு இது பொருந்தாது. 

 

அருணகிரி; இந்தச் சட்டத்தில் ஓட்டைகள் உள்ளனவா? கணக்குக் காட்டாமல் தப்பிக்க வழி உண்டா? 

தொழில் அதிபர்..அதற்கும் வழி இருக்கின்றது. கள்ளச்சந்தை நடக்கத்தான் செய்யும். ஆனால்,அதுவும் படிப்படியாகக் குறையும். பலசரக்குக் கடை வணிகர்கள்  ஆண்டுக்கு 20 இலட்சத்திற்குள் வணிகம் என்றால்  வரி கட்ட வேண்டியதே இல்லை.  அதற்கு மேல் 75 இலட்சம் வரையிலும் விற்பனை செய்தால், அதற்குக் கூட்டு வரிதான். அதாவது, 1 விழுக்காடுதான். வெறுமனே 75000 ரூபாயைக் கட்டி விட்டால் போதும்.  இதற்கு மேல் என்ன வேண்டும்?  ஒரு மாதத்தில் 75 இலட்சத்திற்கு மேல் விற்பவர்கள்தான் மாதாமாதம் வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். 

அருணகிரி; அப்படியா? 

தொழில் அதிபர்;ஆமாம். திரும்பவும் சொல்கிறேன். முறைப்படி கணக்கு வைத்து இருந்தால் ஜிஎஸ்டி நல்லதுதான். மேலும் இப்போது புதிதாக அவர்கள் வழங்கி இருக்கின்ற ஜிஎஸ்டி எண்ணைப் பாருங்கள். அது ஏற்கனவே அவர்களது  பான் கணக்கு எண்தான். அதில் கூடுதலாக தமிழ்நாடு என்றால் அதற்குப் புதிதாக ஒரு கோடு, நாம் எந்த வணிக வரி வட்டத்தில் இருக்கின்றோமோ அதைப் பின்னால் சேர்த்து இருக்கின்றார்கள். இரண்டுக்கும் நடுவில் இருப்பது ஏற்கனவே உங்கள் பான் எண்தான்.

 

எனவே, நாம் இனி என்ன செய்தாலும் அது வருமானவரித்துறைக்குத் தெரிந்து விடும், ஏமாற்றவே முடியாது. முன்பு வாட் வரியில் நாம் வாங்குகின்ற விற்கின்ற பொருளுக்கான வரியை நாமே எழுதுவோம். ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால், இன்புட்டில் 5000 வரி. அதை நான் 1,20,000 க்கு விற்றால், 6000 ரூபாய் வரி வரும். அப்பொழுது 6000 ல் இருந்து 5000 ஐக் கழித்து, 1000 ரூபாய் மட்டும்தான் வரி கட்டுவேன். ஆனால்,இனி அப்படி முடியாது. நான் என்னுடைய 6000 ஐ மட்டும்தான் இன்புட்டில் போடுவேன். நான் யாரிடம் பொருளை வாங்கினேனோ அவர் கணக்கை முறையாகக் கொடுத்து,அந்தக் கணினியில் இருந்துதான் என் கணினிக்கு வர வேண்டும். 

 

அதுவும் 10 ஆம் தேதிக்குள் வந்தாக வேண்டும். அப்படி வரவில்லை என்றால், நான்தான் அவரிடம் கேட்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேலையே இல்லை. நான் வாங்கிய பொருள் உன் கணக்கில் வரவில்லை..அதைக் கணக்குக் காட்டு என்று சொல்ல வேண்டும். அப்படி அவர் கட்டவில்லை என்றால், 6000 ரூபாயையும் நான்தான் கட்ட வேண்டும்.

அப்படி யார் கட்டுவார்கள்?

எனவே, கண்கொத்திப் பாம்பாக இருப்பார்கள். எந்த அதிகாரியும் வந்து இதைச் சோதனை போட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. ஐந்தாம் தேதிக்குள் நான் இன்புட் போட்டாக வேண்டும். பத்தாம் தேதிக்குள் எனக்கு வந்த இன்புட்டைக் கணக்குப் பார்க்க வேண்டும். 20 ஆம் தேதி இரண்டையும் கணக்குப் பார்த்து, அந்தக் கணினியே நாம் கட்ட வேண்டிய தொகையைச் சொல்லி விடும்.

அருணகிரி;அதை எங்கே கொண்டு போய் கட்டவேண்டும்? 

தொழில் அதிபர் அதையும் கணினியிலேயே கட்டி விடலாம். அருணகிரி அப்படியானால் ஆடிட்டரிட்ம் போக வேண்டாமா? 

 

தொழில் அதிபர்  வேலையே இல்லை. 

 *ஆடிட்டருக்கு வேலை இல்லை* 

சேல்ஸ் டாக்ஸ் ஆபீசில் வேலை இல்லை

சென்ட்ரல் எக்சைஸ் பக்கம் போக வேண்டியது இல்லை. 

சர்வீஸ் டேக்ஸ் ஆபீசில் வேலை இல்லை. 

 

அவர்கள் எல்லோருக்கும் இனி வேறு வேலைகள்தான்  கொடுத்தாக வேண்டும்.  *மொத்தத்தில் ஆப்பு சேல்ஸ் டேக்ஸ் அதிகாரிகளுக்குத்தான்* . மக்களுக்கோ வணிகர்களுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. 

 

நேற்றுக்கூட ஒரு *துணை ஆணையரைப்* பார்த்தேன்.எங்கள் கதையை முடித்து விட்டார்கள் என்று சொன்னார். இதுதான் உண்மை. 

 

இப்பொழுது வாட் வரியில் நான் என் கணக்கில் இன்புட் ஏற்றி இருப்பேன். அது மேட்ச் ஆகாமல், என் நிறுவன்த்தின் மேல் பற்றாகவே சேல்ஸ் டேக்சில் இருந்தது.நான் வரி சரியாகக் கட்டியதாகக் கணக்கு வைத்து இருப்பேன். ஆனால் அங்கே ஓராண்டுக்கு 8000, 10000 என் கணக்கில் கட்ட வேண்டியதாகவே காட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் இனி அப்படிக் கிடையாது. இனி கணக்கு மேட்ச் ஆகவில்லை என்றால் நான்தான் அந்தந்த மாதம் கட்டியாக வேண்டும். 

 

அருணகிரி; நீங்கள் சொந்தமாகக் கணினி வைத்து இருக்கின்றீர்கள்?

பலசரக்குக் கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்?

 

தொழில் அதிபர்; அவர்களுக்காக ஏற்கனவே கணக்கு எழுதுபவர்கள் இருப்பார்கள். அவருக்கு மாதம் ஒரு 200 அல்லது 300 ரூபாய் கொடுத்தால் போதும். அவர்கள் மாதாமாதம் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும் அதில் தவறக் கூடாது. வரவையும், செலவையும் கணக்குப் பார்த்து,20 ஆம் தேதி கணக்கை முடித்து,எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். அந்தத் தொகையை வங்கியிலும் கட்டலாம். உங்கள் கணினியில் பான் கணக்கைத்திறந்து ஐந்தாம் தேதிக்குள் உங்கள் பில்கள் அனைத்தையும்  போட்டு விட வேண்டும். பத்தாம் தேதிக்குள் நீங்கள் யார் யாரிடம் எல்லாம் சரக்கு வாங்கினீர்களோ,அவர்கள் கணக்கு அதுவாகவே உள்ளே வந்துவிடும். 

 

20 ஆம் தேதி நீங்கள் போட்ட பில்லையும், அவர்கள் கணக்கில் வந்ததையும் சரிபார்த்து, நீங்கள் கட்ட வேண்டிய தொகை எவ்வளவு என்பதை கணினிதான் உங்களுக்குச் சொல்லும். அதாவது வேலையே இல்லை. சர்வர் இருந்தால் போதும். பத்து நிமிட வேலைதான். பயப்பட வேண்டியதே இல்லை.  விலைவாசி கூடுவதற்கு வாய்ப்பே இல்லை.குறையத்தான் வாய்ப்பு இருக்கின்றது* இதற்காகi விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டிய தேவையே இல்லை என்றார் நண்பர்.

Leave a Reply