ஸ்ரீஹரிகோட்டா: அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி., – எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்பாய்ந்தது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில், பிஎஸ்எல்வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக் கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக் கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சிமையத்தில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் -8 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப் பட்டது.

தற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜிஎஸ்எல்வி., ரகத்தில், 12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ஆறாவது, 'கிரையோ ஜெனிக் இன்ஜின்' பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிட் டுள்ளோம். தொலை தொடர்பு வசதிகளுக்காக உயர் அலைவரிசை கொண்ட செயற்கை கோளாக அது இருக்கும் என்றார்.

ஜி.சாட் 6ஏ வெற்றி பெற்றது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: ஜி.ஜாட் 6ஏவைவெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் அதன் ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் இந்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் தொடர்பு துறையில் மொபைல் பயன்பாடுகளுக்கான புதிய சாத்தியங்களை வழங்குகிறது. தற்போதைய வெற்றியின் மூலம் நாடுபெருமிதம் கொள்கிறது என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply