கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 2017 – 18ம் நிதியாண்டின், ஜூலை – மார்ச் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., மூலம், மத்திய அரசுக்கு, 7.41 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், சி.ஜி.எஸ்.டி., மூலம், 1.19 லட்சம் கோடி ரூபாய்; எஸ்.ஜி.எஸ்.டி., மூலம், 1.72 லட்சம் கோடி ரூபாய்; ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 3.66 லட்சம் கோடி ரூபாய் அடங்கும்.

கடந்த நிதியாண்டின், ஆகஸ்ட் – மார்ச் வரையிலான காலத்தில், ஜி.எஸ்.டி., மூலம், சராசரியாக மாதந்தோறும், 89 ஆயிரத்து, 885 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும், இந்த எட்டு மாதங்களில், மாநிலங்களுக்கு இழப்பீடாக, 41 ஆயிரத்து, 147 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில், ஜி.எஸ்.டி.,யால் மாநிலங்களின் வருவாய் இழப்பு குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 2017 ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply