ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளின், ஜிஎஸ்டி., ரீபண்டுபிரச்­னைக்கு, நிதி ­அமைச்­ச­கத்­தி­டம் பேசி, விரை­வில் தீர்வுகாணப்­படும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில்துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்­ளார்.

இந்­தியா, 2017, ஜூலை 1ல், புதிய வரி விதிப்­பான, ஜிஎஸ்டி., நடை­மு­றைக்கு மாறியது. அது முதல், இந்­தாண்டு மார்ச்வரை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யில், 17 ஆயி­ரத்து, 616 கோடி ரூபாய் திரும்ப அளிக்க, மத்­திய அரசு ஒப்பு­தல் அளித்­துள்­ளது. இதில், ஐஜிஎஸ்டி.,யில், 9,604 கோடி ரூபாய்; உள்­ளீட்டு வரி­யில், 5,510 கோடி ரூபாய் ஆகி­யவை அடங்­கும். இதுதவிர, மாநில அர­சு­க­ளின் வரிக்கழி­வு­கள் ஆகி­ய­வற்­றின் கீழ், 34 ஆயி­ரம் கோடி ரூபாய், ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், கணக்கு தாக்­க­லின்­ போது நேரும் தவ­று­கள், நடை­முறை சிக்­கல்­க­ளால் ஏற்­படும் தாம­தம் போன்­ற­வற்­றால், 40 சத­வீத அள­விற்கே ரீபண்ட் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இத­னால், ஏற்­று­ம­தி­ யா­ளர்­கள், நடை­முறை மூல­தன தேவை­களை சமா­ளிக்க முடி­யா­மல் திணறிவரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், டில்­லி­யில் இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் நிகழ்ச்­சி­யில், மத்­திய அமைச்­சர் சுரேஷ்பிரபு பேசி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., ரீபண்ட், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு மிக முக்­கிய பிரச்­னை­யாக உள்­ளது. அவர்­க­ளி­டம், திரும்­பப் பெற வேண்­டிய வரித்தொகை விப­ரங்­களை கேட்­டுள்­ளேன்.இப்­பி­ரச்­னையை நிதி­ய­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்று, விரை­வில் தீர்வு காண்­பேன்.

நாட்­டின் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மத்­திய அரசு எடுத்துவரு­கிறது. அத்­து­டன், அனைத்து துறை­க­ளி­லும், எந்­தெந்த வகை­யில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­க­லாம் என்­பதை அறிக்­கை­யாக வழங்­கு­மா­றும், ஏற்­று­மதி மேம்பாட்டு கூட்­ட­மைப்­பி­டம் தெரி­வித்­துள்­ளேன். அந்த பரிந்­து­ரை­க­ளின் அடிப்­ப­டை­யில், மாநில அர­சு­க­ளின் ஒத்­து­ழைப்­பு­டன், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த, வலி­மையான திட்­டம் தயா­ரிக்­கப்­படும்.

இது தொடர்­பாக, விரை­வில் அமைச்­ச­ரவை உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தைக்கூட்ட திட்­ட­மிட்­டுள்­ளேன். கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்டை விட, 2017 – 18ம் நிதி­யாண்­டில், நாட்­டின் ஏற்­று­மதி, 9.78 சத­வீ­தம் வளர்ச்சிகண்டு, 30 ஆயி­ரத்து, 284 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இவ்­வாறு அவர் பேசி­னார்.

Leave a Reply