பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசிய மில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.


தில்லியில் புதிதாக கட்டப் பட்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமையக கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செவ்வாய்க் கிழமை திறந்துவைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஜெய்ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அடிப்படை முகாந்திர மில்லாதவை. அது குறித்து விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு நேரமும் இது போல் குற்றச்சாட்டு தெரிவிக்கப் படுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கும்முன்பும், இத்தகைய குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன'


பயங்கரவாதம் என்பது சாபக்கேடு . நாகரிகத்தைக்கொண்ட எந்தவொரு நாடும், தங்களது மண்ணில் பயங்கரவாதம் வளர்க்கப்படுவதை அனுமதிக்காது. பயங்கரவாதத்தின் வளர்ச்சிக்கு, கள்ள ரூபாய்நோட்டுகள் மிகப்பெரிய மூலதனமாக உள்ளன. அதுவும், மிகவும்தரமான கள்ள ரூபாய் நோட்டுகள், பயங்கர வாதத்துக்கு பிராண வாயு போன்று திகழ்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துவருகிறது. அந்த நடவடிக்கையின் பலனை, நாம் நேரில் காணலாம்.


ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் பிறபாதுகாப்புப் படைகளின் கூட்டு நடவடிக்கைகளினால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாள்தோறும் 5 முதல் 6 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டு வருகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply