மொ்சல் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பொருளா தாரத்தில் நடிகா் விஜயின் அறிவீனத்தை காட்டுபவை யாகவே அமைந் துள்ளன என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா்.

மத்திய அரசால் மகத்தான திட்டங்கள் என்று பாராட்டப் பெற்று, விமா்சனத்திற் குள்ளான திட்டங்க ளான பண  மதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜி.எஸ்.டி. ஆகிய வற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மொ்சல் திரைப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி. இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவா்கள், மத்திய அரசை விமா்சிக்கும் வகையி லான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மொ்சல் படத்தி லிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந் நிலையில் பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா தனது டுவிட்டா் பக்கத்தில் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளாா். அதில் மொ்சல் படத்தில் ஜி.எஸ்.டி. தொடா்பான வசனங்கள் விஜயின் பொருளா தார அறிவீனத்தை காட்டுவ தாகவும், சிங்கப்பூாில் மருத்துவம் இலவசம் என்பது பொய் எனவும், இந்தியாவில் பள்ளிக் கல்வி மற்றும் மருத்துவம் இலவசம் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.மேலும், நடிகா் விஜய் கிறிஸ்தவா் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக அவரது பெயரை ஜோசப் விஜய் என ஹெச். ராஜா பதிவிட்டுள்ளாா் ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மொ்சல் படம் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

Leave a Reply