மத்திய அரசுப்பணியில் உள்ள அரசு டாக்டர்களின் பணி ஒய்வு வயதை 65 ஆக உயர்த்திய மத்திய சுகாதார அமைச்சருக்கு நன்றி!!!

 

அரசுப்பணியில் குறிப்பாக கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புற மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் போதுமான அளவில் இல்லை.  அரசுப்பணியில் இருப்பவர்கள் ஒழுக்காக நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு ஆண்டாண்டு காலமாக இருந்தாலும் தற்சமயம் அரசு மருத்துவமனைகளில் பணிநேரத்தில் ஒழுங்காக பணியில் இருந்தார்கள் வெறும் 6 சதவீதம் பேர்தான் என்ற சமீபத்திய தனியார் தன்னார்வ அமைப்பின் புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கின்றது.

 

மருத்துவத்துறையில் பல முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி அரசு தற்சமயம் மருத்துவர்கள் பணி ஒய்வு வயதினை 62 லிருந்து 65 ஆக மத்திய அரசுப்பணி டாக்டர்களுக்கு உயர்த்தியுள்ளதை வரவேற்று இதனையே வழிகாட்டுதலாக ஏற்று மாநில அரசுகளுக்கு செயல்பட வழிகாட்டுவது நல்லது.  இத்திட்டத்தால் 1445 மத்திய அரசு டாக்டர்கள் பயன் பெற்றுள்ளனர்.  டாக்டர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு இதுவே என்பதும் ஏற்கனவே உள்ள போதுமான காலியிடங்களுக்கு புதிய டார்கள் நியமிப்பது இதனால் தடைபடாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்திருப்பது பாராட்டத்தக்கது.

 

Dr. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்.

Tags:

Leave a Reply