மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவின் மாநிலதலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15 ம் தேதிவரை, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, புதுடெல்லியில் கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதாமோகன் சிங், அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடுமுழுவதும் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.