2 நாள் பயணமாக இந்தியாவந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தனிவிமானம் மூலம் ஆமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமானம் நிலையத்திற்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். டிரம்ப்பை கட்டிபிடித்து மோடி வரவேற்றார்.

முதல்முறையாக இந்தியாவரும் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத்முதல்வர் ரூபானி ஆகியோர் நேரடியாக சென்று, பூங்கொத்துகொடுத்து வரவேற்றனர். டிரம்ப்புடன் 12 பிரதிநிதிகள் குழுவும் இந்தியா வந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து நேரடியாக, சாலைமார்க்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் சென்றார். அவருடன் பிரதமர் மோடியும் சென்றார். பிறகு டிரம்ப் மற்றும் மோடி ஆகியோர் சுமார் 22 கி.மீ., பயணித்து மொடிரா கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார். அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இருநாட்டு தலைவர்களும் உரையாற்றினார்.

டிரம்ப்பை வரவேற்பதற்கு முன், அமெரிக்க பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றுள்ள டிரம்ப்பின் மகள் இவங்கா டிரம்ப்பை மோடி கைகுலுக்கி வரவேற்றார். டிரம்ப் கறுப்புநிற உடையிலும், அவரது மனைவி மெலினா வெள்ளை நிற உடையிலும் வந்தனர். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் டிரம்ப் குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

Comments are closed.