அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், அடுத்தமாதம் மத்தியிலோ, அல்லது இறுதியிலோ இந்தியா வரஇருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அவரது இந்திய வருகைக்கான தேதி குறித்து, இருநாடுகளின் அதிகாரிகள், ஆலோசனை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு குடியரசு தினவிழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், தொடர்நிகழ்ச்சிகளால், அமெரிக்க அதிபரால் பங்கேற்க இயலவில்லை என வெள்ளைமாளிகை, பின்னர் கூறியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்ககோரும் தீர்மானம், விரைவில், செனட் சபையில் தாக்கலாகி, வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், அவரது இந்தியபயணம் குறித்த திட்டமிடல் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது.

தாம் அதிபராக பதவியேற்று டிரம்ப் ஒரு முறை கூட இந்தியா வரவில்லை என்கிற நிலையில் தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Comments are closed.