பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிராக பா.ஜ.க, மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த்சின்கா காரசாரமான கருத்துகூறியது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், யஷ்வந்த்சின்கா தன்னை,' பிரிக்ஸ்' வங்கி தலைவராக நியமிக்கும்படி கேட்டுள்ளார் என நினைக்கிறேன். அதற்கு முடியாது என மறுக்கப் பட்டதால், அவர் பிரதமர் மோடிக்கு எதிராகபேசி உள்ளார். எனக்கு தெரிந்து டில்லியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை முன்னேற்றி கொள்ளவேபேசுவார்கள். அது மறுக்கப்படும் போது எதிர்த்து போராடு வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply