2014ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் பா.ஜ., அமோகவெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி 2014ம் ஆண்டு மே 26ம்தேதி பதவியேற்று கொண்டார். நேற்று தனது இரண்டு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த பா.ஜ.க, 3ம் ஆண்டு துவங்கும் இன்று டில்லியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடுசெய்துள்ளது.

மே 28 அன்று டில்லி இந்தியாகேட் பகுதியில் "முன்னேற்ற படிகள்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட விழாவிற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், புதிய முயற்சிகள் குறித்த விளக்கப்  படங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் இடம்பெற உள்ளன.

Tags:

Leave a Reply