நாட்டின் 70வது சுதந்திரதினத்தை ஒட்டி தலை நகர் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியேற்றி வைத்து நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.இதில், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டுதூதர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


ஆயிரக் கணக்கான காவல் துறையினர் மற்றும் கமான்டோ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply