தமிழகத்தில், தடையைமீறி யாத்திரையை நடத்தவும், கைது செய்தால், மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தவும், பா.ஜ., முடிவு செய்துள்ளது.

ஹிந்து மத கடவுள் முருகனை புகழ்ந்துபாடும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய, கருப்பர் கூட்டத்தினர், அவர்களின் பின்னால் உள்ளவர்களையும் கைதுசெய்ய வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், இன்று திருத்தணியில், வெற்றிவேல் யாத்திரையை துவக்க இருந்தார். ஆனால், யாத்திரைக்கு, தமிழகஅரசு அனுமதி அளிக்கவில்லை.

எனினும், திட்டமிட்டபடி யாத்திரையை துவக்க, பா.ஜ., தலைவர் முருகன் முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர், யாத்திரையை துவக்கமுயன்றால், போலீசார் கைது செய்வர். அவர் கைது செய்யப்பட்டால், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த, கட்சிநிர்வாகிகளுக்கு, பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது.

யாத்திரைக்கு அனுமதிவழங்கினால், ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இல்லையேல், ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும்.அவ்வப்போது, கட்சி தலைமையிடம் இருந்து உத்தரவுவரும் என, கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க பட்டுள்ளது.

Comments are closed.