ரொம்ப வருடங் களாகவே கோயில்கள் போவதில்லை, சாமியார்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை, பாரம்பரிய கோவில்கள் மட்டுமே எப்போ தாவது போவத உண்டு, உண்டியலில்காசு போடுவதில்லை

கோவில்களில் அறநிலையத்துறை செய்யும் அட்காசங்கள் தெரியும், நிர்வாக அலுவலர் கோவில் சந்நிதிக்கு வந்ததில்லை, பல கோயில்களில் அவருடைய அலுவலகத்திற்கே வந்ததில்லை, உண்டியல் திறக்கப்படும் போது கிடைக்கும் பணத்தை எண்ணாமல் பேண்ட்பாக்கெட்டில் அள்ளிசொருகும் அலுவலர்களை பார்த்து இருக்கிறேன்

சமீபத்தில்கூட பழனியில் ஒரு அலுவலர் காணிக்கையாக வந்த தங்கநகைகளை பேண்ட்பாக்கெட்டில் சொருகும் வீடியோ ஒன்று வந்தது. சென்னை புறநகர்பகுதியில் உள்ள பாரம்பரியமான கோவில் ஒன்றில் விளக்குக்கு ஊற்ற எண்ணை கூட இல்லை, அதற்காக கணக்கு காட்டிய பணம் அலுவலரின் சின்ன வீட்டு செலவிற்கு,இப்படிப்பட்ட கோவில் நிர்வாகிகள் அறை கோயிலிலேயே இருக்கும். அங்கே அசைவம் புகை டாஸ்மாக் அனைத்தும் உண்டு.

அதற்கு மேலும் நடப்பது உண்டு சொல்ல விரும்பவில்லை. சில நாட்களுக்கு முன் சுவாமி மலை வடபழனி சென்றேன். உண்டியலில் போடாமல் அர்ச்சகர் தட்டில் வழக்கம் போல. தட்டில் நூறு ஐநூறு என நிறைய விழுந்தன

பரவாயில்லையே அர்ச்சகருக்கு நல்ல வருமானம் போல என நினைக்கும்போது. அந்த தட்டை காக்கிசட்டை அணிந்த ஒருவர் எடுத்துவிட்டு வேறு காலித்தட்டை அர்ச்சகரிடம் கொடுத்து சென்றார். விசாரித்த போது தட்டு காசுகளை அலுவலர்கள் பிரித்து கொண்டு மிச்சத்தை அர்ச்சகரிடம் கொடுப்பார்கள் என தெரிந்தது

பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தட்டுக்கள் மாறும், உண்டியலில் போடவேண்டாம் என தட்டில் போட்டால் அதற்கும் பங்கு போட வரும் பிச்சைகாரர்கள். பிரபல உணவகங்களில் Tip Box என்று ஒரு பெட்டி இருக்கும். நமக்கு நல்லமுறையில் பணிபுரிந்த சர்வருக்கு கொடுக்கும் tips ஐ அவர் ஒரு Tip box ல் போட்டுவிட்டு
மாலையில் அனைவரும் பிரித்து கொள்வார்கள்

அறநிலையத் துறைக்கு போககூடாது என்று தட்டில் போட்டால் அங்கும் வந்துவிட்டார்கள் இந்த பிச்சைக் காரர்கள். மனசாட்சியுடன் நாத்திகனாகவே மீதி நாட்களை வாழ்ந்து விடலாம் போல.

நன்றி குமார் கந்தசாமி

Leave a Reply