மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்குவந்து நிலையில், பாஜக தனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும்  வேலையைத் துவங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றிபெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின்போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகாலம் முதல்வர் பதவியை விட்டுத்தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக பொய்  கூறி முதல்வர் பதவியை கேட்டது சிவா சேனா

முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என்று மறுத்துவிட்டது. மேலும், அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை, சிவசேனா பொய் சொல்கிறது என்று பாஜக கூறிவிட்டது.

இந்த சண்டைக்குபின், ஆட்சியமைப்பதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. இதன்பின், பாஜக முன்னாள் முதல்வர் பட்நாவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து தங்களுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க முடிய வில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, சிவசேனாவை கவர்னர் அழைத்தார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுதங்களுக்கு இருப்பதாகவும் 3 நாட்கள் அவகாசம் அளித்தால், அவர்களின் ஆதரவுகடிதத்துடன் வருவதாகவும் சிவசேனா தலைவர்கள் கவர்னரிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார்.

அதற்கு பிறகு தேசியவாத காங்கிரசுக்கு அழைப்புவிடுத்த கவர்னர் கோஷ்யாரி, அன்று மாலையே ஜனாதிபதி ஆட்சியமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை அனுப்பினார். இதையடுத்து, டெல்லியில் அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அதில் கவர்னரின் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டுமென்று தீர்மானிக்கபட்டது.

இந்த பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதற்கிடையே தங்களுக்கு கவர்னர் போதியகால அவகாசம் தரவில்லை என்று கூறியும், ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா அவசரமனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், பாஜக தற்போது சிவசேனாவை கைவிட்டுவிட்டு, ஆட்சியமைக்க முயன்று வருகிறது. மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 145 உறுப்பினர்கள்தேவை. தற்போது பாஜகவிடம் 105 பேர் இருக்கிறார்கள். சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44, சுயேச்சைகள் 29 பேர் இருக்கிறார்கள். இவர்களில் முதல் கட்டமாக சுயேச்சைகள் 29 பேரிடமும் பாஜக தலைவர்கள் மறைமுகமாக பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளனர். அவர்கள் வளைத்து விட்டால், அதன்பிறகு 11 எம்.எல்.ஏ.க்கள்தான் தேவை. இம்முறை சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரும் மற்றவர்கள் சிலரும் ஆதரவு தருவார்கள் என்று பாஜக நம்புகிறது. எனவே, ஜனாதிபதி ஆட்சியை சில மாதங்களுக்கு நடத்தி, அதற்குள் மெஜாரிட்டியை பிடித்துவிட பாஜக முயன்றுவருகிறது.

பாஜக மூத்த தலைவர் நாராயண் ராணே கூறுகையில், நான் பட்நாவிசிடம் பேசினேன். எப்படியாவது பாஜக ஆட்சியை அமைத்துவிட வேண்டுமென்று உறுதியாக இருக்கிறார். அவருக்கு நான் உதவியாக இருப்பேன். ஆட்சியமைக்க என்ன தேவையோ அதையெல்லாம் செய்வோம். சிவசேனாவால் என்சிபி-காங்கிரஸ் ஆதரவை பெறமுடியாது. அவர்கள் சிவசேனாவை முட்டாளாக்கி விட்டார்கள் என்று கூறினார். நாராயணன் ராணே ஏற்கனவே சிவசேனாவில் இருந்தவர். அதனால், அவரே சிவசேனா எம்எல்ஏ.க்களை வளைத்துவிடுவார் என்றும் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments are closed.